Wednesday, June 24, 2009

முறட்டு இரவு


போதையில் வந்த பொல்லாதவர்
கைகளில் எங்கள் முகங்கள்
கலந்தாலேசிக்கப்பட்டன - பின்பும்
நெழிந்த பாத்திரங்களை பழித்த
கன்னங்களுடன் யாக சாலைக்கு
அழைத்துச் செல்லப்பட்ட நாங்கள் - அங்கும்
யேசுநாதரின் வாக்குறுதியைக்
காப்பாற்றிக் கொண்டிருந்தோம்.


சுயநிலை அறிய மதுக்குடல்கள்
மறுத்துவிட்டன இப்போ வெறி
அரக்கமுகங்களில் பளபளத்தது
மத்தியானம் வரை சோற்றுக்காக சாய்த
கைகள் மாலையில் மதுக்கோப்பைகளில்
மாறிவிட்டன - இரவோடு
மதுக்கர மனிதர்கள் நல்ல சிற்பங்களை
எங்கள் முகத்தில் செதுக்கிவிட்டு நிமிர்ந்தனர்

குருதிகளும் கொப்பளங்களும் கொண்ட
எங்கள் மனங்கள் அடுத்தநாள் காலையில்
போசாக்கு நிரம்பியிருந்தன கூடவே
முரட்டுத்தனங்களும் புகுத்தப்பட்டன

மது மனிதர்கள் தூங்கிவிட்டனர் சாமத்தில்
வயிறு தண்ணீருக்காக அழுதுகொண்டது
குருதிகள் இயல்பாகிவிட்டன அவர்களின்
கரங்கள் மட்டும் எம்மைவிட்டு அகலவில்லை

நேற்றய நிகழ்வாகிவிட்ட போதும் பிழை
என்றும் சரியென்றும் பலர் கதைத்ததை
பிழைதிருத்தி சரியென சித்திரம் வடிக்க
நண்பர்களின் மானாடுகள்

கடைசியில் பிழைகள் மதுக்களில்
மாற்றப்பட்டன இப்போ
விரிந்த முகங்களுடன் அவர்களும்
நாங்களும்….

பகையொன்றுமில்லை முன்னரே
பதவிகள் வகுத்த சட்டங்கள் எங்கள்முன்
பலிகொடுக்கப் பட்டதால் இன்னும்
பதிலற்ற முகங்களே எங்கள்முன்…

Tuesday, June 16, 2009

கொலைக்கருவிகள்




பொசுக்கிவிடுங்கள் நல்ல
நகரத்தை அங்குதான்
பொன்விளைகின்றது என்பதால்
அறுத்து விடுங்கள் தொடுப்புகளை
படகுகள் கரைசேராது நாடு
கடந்து போகட்டும்

துடைத்து விடுங்கள் அறிவு
கிண்ணங்களை அவர்கள்
இருப்பதால்தான் உண்மை
விழுங்கப்படாது போகிறது


கூட்டிவாருங்கள் பேய்களையும்
பிசாசுகளையும் பிணங்களின்
மேல் இருந்து பிரசாரம் செய்ய
நாடு நல்ல நிலைபெற்றதென்று

விடைபெறுவார்கள் அறிவு
கிண்ணங்களும் அருள்நகரங்களும்
குருதி தோய்ந்த முகத்துடன்

பத்திரிகைகளே!வானொலிகளே!
தெலைக்காட்சிகளே பேசுங்கள்
உங்களை தொலைத்துவிடுபவர்
பற்றியல்ல உங்களிடம்
இருந்து பிரிந்தவர்கள் பற்றி!

குரு முதல் குரோதன் வரை
சட்டம் சனமென்ற நாட்டில்
கொலைக்கருவிகள் நீதி
தராசுகளில் ஏறி நீதிபதிகளை
கேட்டன வேண்டுமா
உன் உயிர் என்று.

Tuesday, May 12, 2009

உயிருள்ள பிணங்கள்




நான் கண்ட கனவு முடிந்துவிட்டது
நேற்றோடு-இன்று வெறுமையால்
புலம்பித்திரிகின்றேன்.தினமும்
கூடவே இறந்துகிடக்கும் தென்னை
மரமும் இடையில் நசிந்த
உடல்களும் சாலையில்
தேங்கிக்கிடக்கின்றன்.

பருத்த யானைகளையும் நாற்
படை வீரர்களையும் தள்ளிக்கொண்டு
குருதி ஆறுகள் புறப்பட்டன-பரணியில்.
இன்று தமிழனின் வரலாற்றைத்
தள்ளிக்கொண்டு வருகின்றன
சர்வதேச சேற்று ஆறுகள்-

இதுவரை கனவு கண்ட எதிரி
கண்களைத்துடைத்தபடி
நிழல்களின்பின் நடக்கின்றான்
முறிந்த பனையும் எரிந்த வயலும் அவனை
ஆழைக்கிறன அழிவின் வழிநோக்கி
உயிருள்ள பிணங்கள் ஊருக்குள் இப்போ

கொம்புகளைப் பெற்றுவிட்டன.
குதிரைகள் மண்ணை ஏந்தியபடி
சார்க் நாடுகள் விலகின்
குதிரைகளுக்கு கொம்பேது
கோம்பில் மண்ஏது!தமிழ்குருதி;
ஆறாக்கப்பட்டுவிட்டன அதில்
ஆடித்துச்செல்லபடுபவை
ஆயல்நாட்டு கறுப்புமுகங்கள்!

இன்றும் கனவு வரும் அது
நனவாகும் என்றெண்ணித் தூங்கினேன்.
மனித வாழ்வும் மரணச் சடங்குகளும்
மரண ஓலங்களும் வீதியில்
நடப்பதை எண்ணியபடியே!
வெறுமையாக்கப்பட்ட மனதில்
காலையில் ஏதோ ஒரு
கதை சேர்க்கப்பட்டதை உணர்ந்தேன்.
இரும்பு மழைகளி;ல் நனைந்தபடி
வெகு தூரம் நடந்து சென்று
வேளை உணவருந்தியபின்
வுpசாரணைக் கலைஞர்களின் சந்திப்புக்கள்
நிகழ்ந்தன. விடியவே நீதுபதியும் அவர்களே!

தாயின் கண்முன் வேடிக்கயாக
ஆழைத்துச்செல்லப்பட்ட மகள்
பல மிருகங்கள் மத்தியில்
காட்சிக்கு வைக்கப்பட்டாள் பல
கைகள் மாறியபின் முகாமிற்குள்
தாயின் கண்முன் வெற்றுடலாக

இரும்பை ஏந்தியே பழகிய கைகள்
போலி முகங்கள் என்றபின்னும்
வாலை ஒடுக்கியபடி அதற்குள்
மண்டியிடவேண்டுமா?இன்னும்கனவுகள்
எனக்குள் வரத்தான் செய்கிறது.
தேக்கிவைக்க இடமில்லை மனதில்.

ஆழிக்கப்படும் அடையாழங்களும்
ஆழிந்த உறவுகளும் மனதில்
கனவை முடித்துக்கொண்டு நான்
போகவேண்டியிருந்தது மனவள
ஆலோசனைக்கு ஊமை நெஞ்சுடன்….

சமயல் பாத்திரத்துக்குள் வீசப்பட்ட தலைகள்.



நிலவிரிப்பின் கீழ் நின்மதிப் பெருமூச்சு
செலவில்லாது போக்கு வரத்துச்செய்ய
சிறு தூரமாகிவிட்டது எம் நிலம்-நேற்று நாம்
இருந்தஇடத்தில் வெடிகணைச்செலுத்திகள்
வந்து குடியேறி எமது இருப்பிடத்தை
பார்த்து விச எச்சியை துப்புகின்றன.
பீரங்கிகள். சன்னங்கள் தமிழ் உடல்களை
கிழித்துக்கொண்டு வேறு உடலடகளை தேடுகின்றன

கிடங்குகளிற்குள் இருந்து கிளம்பிய தலைகள்
சமயல் பாத்திரத்துக்குள் வீசப்பட்டன தாயின்
முலையில் முட்டிக்கொண்டிருந்த பிஞ்சு
குழந்தையின் குடல்கள் வேலியில் மாலையய்
வீற்றிருக்கின்றன –குழந்தை பேசுகிறது
சமாதானம்பற்றி அது அனுபவித்துவிட்டதால்-ஆனால்
அயல்நாடுகள் குழந்தை பிறக்குமுன்னே
கொன்று விடு என்று முதுகில் தட்டிக் கொடுக்கின்றன.

நில விரிப்புக்கள் எமது நிரந்தர வீடாகின-கிடங்குகள்
இப்போ எம அரண்மனையாகின இருட்டை
கிழித்துக்கொண்டு வரும் குண்டுகளை
தமிழ் தலைகள் வலிய இழுத்துக்கொண்டன
காந்தம் பொருத்தியவை போல..
தாயின் வயிற்றில் எஞ்சியிருந்த கருவும் தன்
உறவுகள் படும் இன்னலை கண்டு கதறமுன்
இருப்பு தவறு என்பதை உணர்த்திவிட்டது குண்டு.

சிதைந்த உடல்களை சுற்றி காகங்கள்
சத்தமிட்டு சாவை அறிமுகம் செய்து வைக்கின்றன
ஓடிஓடி அலுத்துவிட்ட வளர்ப்பு நாய்கள்
ஓரமாக நின்று ஊழையிடுகின்றன் வேண்டாம்
நமக்கினி வாழ்வு என்று.பறந்து பறந்து
அலுத்து விட்ட நாரைக்கொக்குகள்
விடைபெறுகின்றன தாய்நாட்டிடம் - எஞ்சியிருக்கும்
நாரை குஞ்சுகள் கூடுகளை எறிந்துவிட்டு
இறகின் வரவுக்காக கொப்பில் அமர்ந்து காத்திருகின்றன

மேச்சல் தரையில் இரத்தத்தால்
முளைத்த புல்லை மணந்தபடி
மனிதகுணம் இனி எம்மில் மலர்ந்துவிடுமோ
என்றஞ்சி உணவை மறுக்கின்றன் மந்தைகள்
கால்களையும் கைகளையும் இழந்த
மந்தைகள் மருத்தவ சிகிச்சைக்காக
ஜமலோகம் செல்கின்றன மணத்தபடி

இரத்தத்தை புசித்து அலுத்துவிட்ட
எறும்புக்கூட்டங்கள் ஒருபொழுதாவது
ஓய்விலிருப்போம் என்று நகரமுடியவில்லை!
கட்டெறும்பும் கறுத்தெறும்பும் கூடி யோசிக்கின்றன
குருதியை முட்டாது தப்புவது எப்படி என்று.
முடிவில் அவைகளும் குருதியால்
அடித்துச்செல்லப் பட்டன.

Thursday, May 7, 2009

சொல்லும் வார்த்தை



மாரிக்காலமழை சொன்னது
சுட்டு பொசுங்கும் தேசத்தை
மீளவும் உயிர் கொடுக்க
முடியவில்லை என்று

நான்புகமுன்பே அங்கு
ஒளிகள் பிறந்துவிட்டன
கூரைகளில் காலை
கதிரவன் சொன்னது

தேய்ந்துபோகமுன் முழுமையாய்;
பார்த்தேன் தேசத்தை நேற்று
தாங்கமுடியவில்லை சுடுகாடான
பூமியை பார்க்க தேய்ந்துவிட்டேன்
பிறையாய் இன்று நிலா சொல்கிறது.

கடலலையும் அமைதியாகிவிட்டது
மனிதர்களெல்லாம் நிமிர்நததால்
பிணமாகி நிலத்தினில் சுருள
எனக்கேன் எழுச்சி என்று

மனிதர்கள் சொன்னார்கள்
நாங்கள் இருக்கிறோம் எங்களிடம்
அங்கங்கள் இல்லை இரும்பு
கம்பிகளும் மரத்தடிகளும்
பிளாஸ்ரிக் சேர்வைகளும் எமக்கு
அங்கங்களானதால் நோக்களுமில்லை
வேதனைகளுமில்லை என்று

Wednesday, April 8, 2009

எப்பவோ முடிந்தகாரியம்



பிரிக்கப்பட்ட உறவுகள்
பற்றி எண்ணியபடி
பொழுதுகள் கழிக்கப்பட்டன
உறவுகள் பலவாறு!
தாயென்றும் தந்தையென்றும்
அண்ணனென்றும் தம்பியென்றும்
அக்கா தங்கை அயலவர் நண்பர்
பிரிவுகள் நிரந்தரமாயும் வந்துவிட்டன.

கடல் கடந்த நாடுகள் சேர்ந்த
கூட்டுக்களும் இரும்பு
பீரங்கிகளும் ஒன்றாகி எம்
உறவுகளின் உயிர்களை
தட்டிப் பறித்துக்கொள்கிறன.

ஒரு பெரும் எதிர்பார்ப்புடன்
என்முன் பல மனிதர்கள்
அதில்நானும் பிரிவல்ல
தினமும் பத்திரிகை வாசலில்

எப்பவோ முடிந்தகாரியம் ஒரு
பொல்லாப்புமில்லை முழுவதும்
உண்மை என்ற சுவாமிகள் தரிசனம்
ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் மனிதர்கள்
இப்போது சுவாமிகள் நாங்களே!

என்முன் நிற்கும் பல மனங்கள்
காயப்பட்டு விட்டன- பிரிந்தும்
காயமாக்கப்பட்டும் துடிக்கும் எம்
உறவுகளின குரலால்

காயத்துக்கு மருந்தில்லை புண்
பட்ட மனங்களுக்கு வாழ்வில்லை
அழுகை எமக்கு வரமானது
என்முன் நிற்கும் பல மனங்கள்
காயப்பட்டு விட்டன.

Tuesday, April 7, 2009

அவசர வண்டிகள்


மன்னாரின் விளை நிலங்களிலிருந்து
மூட்டைகளை கட்டிய சனங்கள்
கால்மடித்து இன்னும் இருக்கவில்லை
மர நிழல்களில் தஞ்சம் புகும்போதெல்லாம்
மடிகளில் வந்து விழும் குண்டுகளால்
சிதைந்த உடல்களை கொண்டு
மாட்டு வண்டில்கள் புறப்பட்டன

முறிப்பு கோணாவில் என்று வந்து
பருவகால மின்மினி பூச்சிகளைப்போல்
குப்பி விளக்குகளை மிளிரவிட்டு
கூடாரத்தில் வாழ்ந்த சனங்கள்
ஏறிகணைகளால் எடுத்து வீசப்பட்டனர்
குப்பைகளுக்குள்

சுமைகளை சுமந்த சனங்கள்
வருட காலமாய் கிளிநொச்சியையும்
தாண்டி வசந்தகால வண்ணத்து
பூச்சிகளாய் படை எடுத்தனர் வயல்
நிலங்களுக்குள் நடக்கும் பிணங்களாய்!
பல தலைகள் கொண்ட நாகங்கள்

தலைகளை நீட்டி விஷ எச்சங்களை
வீசின மழைபோல் நனைந்துகொணடனர்
இரையான பாவிகள் குருதியில்
குழல்களுக்குள் இருந்து புறப்பட்ட
குற்றிகள் சனங்கள் செல்லும்
பாதைகளை ஊடறுத்தன சிதறியபடி

விஞ்ஞான அறையில் அற்பமாய்
இருந்த பொஸ்பரஸ் கலவைகள்
பெரிய இரும்பு போத்தல்களில்
வழங்கப்பட்டன மாணவர்களுக்கு
எடுத்துக்கொண்டு புறப்பட்டன
அவசர வண்டிகள் எரிந்த
உடல்களை மருத்துவமனைக்கு
அப்போதுதான் தேடிக்கொண்டிருந்தார்
மருத்துவர் தீர்ந்த மருந்து போத்தல்களை

வைத்தியர்கள்


சர்வதேசத்தின் கழிவு
இரும்புத்துண்டுகளின்
இருப்பிடங்கள் தமிழர் உடல்கள்
சல்லிக்கூடைகளை சுமக்கிறன
தமிழர்தலைகள் நாளையைநோக்கி

அறுவை சிகிச்சை நிபுணர்களாக
ஆட்லறிகளில் ஏற்றி
அவசரமாக அனுப்பப்படும்
ஆபத்து வைத்தியர்கள்
பிஞ்சு உடல்களை கிழித்து
அணிந்தனர் ஆடையாய்

வயல் நிலங்களில் பிஞ்
சுகுழந்தைகள் பிணங்களாய்
நடப்பட்டனர் முளைகளை கிள்;ளி
தறப்பாளிற்குள் ஒளிந்திருந்த
மனிதர்களின் தசைகளுக்குள்
ஒளிந்துகொண்டன ரவைகள்

பிணவாடை நுகர்ந்து செல்லும்
காற்று அசைவைநிறுத்தி
அமைதியாய் சென்றது வேண்டாம்
இனியொரு பவனி என்று

மல்ரி பரலில் ஏற்றி அனுப்பிய
நிவாரண பொதிகள்
சமயலிடமுன் நிரம்பின
வயிற்றுக்குள் குடல்களை
வெளியேற்றிவிட்டு
தரைவிரிப்பின் கீழ் நுளைந்த
பாம்பு தீண்டமுன்
தீண்டியது ஏ கே போட்டி செவின்
குருதியாற்று மீனாய் நாங்கள்
வைத்தியரிடம் செல்லவில்லை!

Thursday, March 12, 2009

சிறுகதை “கடையடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்”


“யாரடா என்ர இடத்தில இருந்தது.இரண்டு நாள் வரேல்ல எண்டா சரி எல்லாம்” என்றபடியே வகுப்பறைக்குள் நுளைந்தான் றமேஸ். “ஓமடா நீ வீட்டில கிடந்திட்டு ஆடிக்கொருக்கா அமாவாளைக்கொருக்கா வருவ இதென்ன தோட்டமா” தோட்டம் செய்வது அவ்வளவு இழக்கனமோ தெரியவில்லைஇ வகுப்பு மெனிற்ரர் கேட்டார்.

மூன்று நாட்கள் பாடசாலைக்குச் செல்லாததால் வகுப்பு மெனிற்ரருக்கும் றமேஸிற்கும் வாக்குவாதம்.


இயற்கை எழில் கொஞ்சும் வயல் நிலங்களும் தோட்ட நிலங்களும் சேர்ந்த சிறிய கிராமத்திலஇ; ஒரு வறிய விவசாயிக்கு மூன்றாவதும் கடைசிப்பையனாகவும் பிறந்தவன் றமேஸ். எதுவோ தகப்பனின் உழைப்பாலும் தாயின் முயற்சியாலும் பாடசாலைக் கல்வியை தொடர்ந்தான்.
தந்தை கஸ்ரப்பட்டு உழகை;கக்கூடியவர்தான் ஆனால் உழகை;கும் பணத்தில் அரைவாசியை தன் உடல்அலுப்பைத் தீர்க்க எடுத்துவிடுவார்.மிகுதி அம்மாவின் கையில் சேரும். “இந்த மனுசன் திருந்தாது. எப்பவும்இப்படித்தான் வீட்டுக்கஸ்ரம் உணராததுகள்” தாய் பொறுப்புள்ளவளய்த்தான் இருக்க வேண்டும்.

றமேசின் தந்தைக்கு வயல் தோட்டம் என்று இருந்தாலும் நின்மதியாய் தொழில் செய்ய முதலீடு ஏதும் இருக்கவில்லை. ஏதோ தன் உழைப்புத்தான் முதலீடும் வருமானமும். அதனாலோ என்னவோ சிவலிங்கத்துக்கு வீட்டில் அக்கறையில்லை. அப்படிச் சொல்வதைவிட ஒரு விரக்தி நிலைதான் அது.
றமேஸ் பள்ளிப்பரவத்தில் சுட்டித்தனம் நிறைந்தவன். ஏடு தெடக்கிய அன்றே தன்னை சிவம் சேறின் மடியில் இருத்தியதற்காக தாய்க்கு வீட்டில் வந்து நல்ல அடி “ஏன் அவற்ற மடியில என்ன இருத்திநீங்க” என்று.

தாய் பார்வதி எப்படியாவது மகனைப் படிப்பித்து முன்னேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். காரணம் தகப்பன் ஒரு குடிகாரன் தான் எட்டாம் வகுப்புத்தான் படித்தவள். இருந்தாலும் குடும்ப வறுமை றமேஸின் கல்வியில் பல தடைகளைப் போட்டது.

றமேஸிற்கு பள்ளிக்குப்போவதைவிட தந்தையுடன் தோட்டத்துக்குப்போவதென்றால் நல்லவிருப்பம்;. காரணம் தனக்காக அப்பாவும் அம்மாவும் கஸ்ரபடுகிறார்கள் என்பதை நல்லாவே உணர்ந்திருந்தான். “அம்மா நான் இண்டைக்கு பள்ளிக்கூடம் போகேல்ல அப்பாவோட தோட்டத்துக்கு போகப்போறன்”என்றவாறு வீட்டுக்கு பின்புறமாகப்போனான் றமேஸ். “இல்ல ராசா நேற்ரும் ரீச்சர் கண்டு என்னத்தான் பேசினவா. அப்பாவோட நான் போறன். நீ பள்ளிக்கூடம் போ” என்றவாறே சிவப்பியில் கறந்து வந்த பாலை காச்ச ஆரம்பித்தாள்.

தாயின் உதவியுடன் 9ஆம் தரம் வரை வந்துவிட்டான். “அம்மா பாவம் எனக்hகக மாட்டுக்குப் பின்னால திரியிறா”இது தான் அவனது ஏக்கமாக இருந்தது. அதனால்த்தான் அடிக்கடி பாடசாலைக்குப்போகாமல் நின்று விடுவான். “அம்மா இண்டைக்கு மாடுகள நான் கொண்டு போறன்” என்றான். இல்ல இல்ல எனக்குத்தெரியும் அது நீ நிக்கவேண்டாம்” “அப்பிடி என்றால் பள்ளிக்கூடம் போயிற்று வந்து என்னை மாறிவிடு” சொல்லிக்கொண்டு நேற்றப் பிடுங்கிய மிளகாய் பழத்தை காயப்போட சென்றாள்.

அம்மாவின் விருப்பப்படியே றமேஸ் பாடசாலைக்குப்போய்விட்டு வந்து தாயை தேடிப்போனான். போகும் வளியில்; ரீயூசனுக்கு போன வகுப்பு பொடியனுகள். “எங்கடா றமேஸ்? மாடு அம்மா வைச்சிருக்கிறா மாறிவிடப்போறன். ஏன்ரா மாடு மாடு என்று சாகிற ரீயூசனுக்கு வந்து பாக்கலாமே” நக்கலாகக் கேட்டான் ரூபன்.

உண்மையில் அவன் மாடு மாடு என்று சாகிறான்தான். காரணம் அவைதான் அந்தக்குடும்பத்தைப் பொறுத்தவரை குல தெய்வங்கள். அவைக்கு சிவப்பி கறுப்பி வெள்ளையம்மா குண்டாத்த என்று செல்லப் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.வயிறு பட்டிணிஇல்லாமல் தூங்க அவைதான் அந்த குடும்பத்தின் தாய்ப் பறவைகள்.

வகுப்பு ரீச்சரும் சரி பாட ரீச்சரும் சரி றமேஸை பேசுவது அதிகம். காரணம் வீட்டுக்கஸ்ரம் அவர்களுக்கும் தெரியும். “ஏதோ கஸ்ரப்பட்டு அதுகள் படிப்பிக்குதுகள் நீ நல்லாப் படிக்க வேணும்” என்று தினமும் சொல்லுவினம்.தமிழ் பாட ரீச்சர் றமேஸின் வீட்டுக்கு பக்கத்து வீதியில்த்தான் இருக்கிறா. அடிக்கடி தாயிடம் எல்லாவற்றையும் சொல்லுவா.

“அம்மா நீங்கள் தான் அவன வீட்டில மறிக்காம அனுப்போணும்.கஸ்ரம் கஸ்ரம் என்று சொல்லி அதுகளின்ர வாழ்க்கையையும் கஸ்ரமாக்கக்கூடாது”

வீட்டுக்கு வந்த பார்வதி றமேஸை கூப்பிட்டு “தம்பி ரீச்சர் எனக்குத்தான் பேசிறா. நீ இனி ஓழுங்கா பள்ளிக்குடம் போ! அவ வீட்டில ரீயூசன் சொல்லிக்கொடுக்கிறா அங்மையும் உன்ன அனுப்பச்சொன்னவா. இண்டையில இருந்து அங்கயும் போ”என்று அன்பாகச் சொன்னாள்.

தாயும் கல்வியை வெறுக்கவில்லை பிள்ளையும் கல்வியை மறுக்கவில்லை. ஆனால் இவர்களது குடும்பச்சூழல் இதுபோன்ற விரிசலிகளையும் அக்கறையின்மையையும் தோற்றுவிக்க ஏதுவாக இருந்தது.ரீச்சர் றமேஸிடம் தான் கற்பிக்கும் பாடங்களுக்கு கட்டணம் அறவிடவில்லை. க.பொ.த சாதாரணதரம் படிக்கும்போதுதான் ரீயூனுக்குப்போனான். தான் எப்படியாவது படித்துவவிடவேண்டும் அம்மாவின் கனவை நினைவாக்க பேண்டும் என்பதில் குறியாக இருந்த றமேஸ் சாதாரண தரப்பரீட்சையில் முதல்தரத்தில் சித்தி பெறவில்லை இரண்டாம் முறை 8பாடங்களில் சித்திபெற்றான்.

அவனது உயர்கல்விப்படிப்பிற்கு அந்தக்கிராமத்தில் வசதி இருக்கவில்லை. அயல் பிரதேசத்துக்கு அல்லது 20முஅ கடந்துதான் கற்கவேண்டியிருந்தது.

தனது கிராமத்து மருத்துவமனை மருத்துவரின் உதவியுடன் ஒரு ஆண்கள் விடுதியில் தங்கிநின்று கல்லூரி ஒன்றில் கலைப்பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தான் றமேஸ்.
இடையிடையே வீட்டிற்கு வந்து போவான். பார்வதியும் தான் பொத்திப்பொத்தி வைத்திருந்த பணத்தை கொடுத்து ஏதோ சமாளித்தாள். றமேஸ் வீட்டு நிலையை நன்கு உணர்ந்ததால் அதற்கு ஏற்றால் போலவே செலவுகளையும் வைத்துக்கொண்டான்.இங்கும் அவனால் முதல்தடவையில் சித்தியடையமுடியவில்லை.

இரண்டாவது தடவைக்கு பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு ஒரு தையல்கடையில் வேலைக்கு சேர்ந்துகொண்டான். கிழமை நாட்களில் காலை8.00 மணிமுதல் இரவு 8.00மணிவரை கடையில் வேலை செய்துவிட்டு அதன்பின்பு தான் தங்கியிருந்த றூமிற்குப் போய் படிப்பான்.சனி ஞாயிறு தினங்களில் ரீயூசனுக்குப்போவான்.

அவன் தங்கியிருந்த றூமிற்கு பக்கத்துவீட்டு அன்ரிகூடகேட்பா “தம்பி இப்பிடி படிச்சு எப்படி பாஸ் பண்ணப்போற”என்று. அன்ரிக்கு தெரியாது அவனது வீட்டு நிலை;. றமேஸ் தன்னைப்பற்றி அனாவசியமாக யாரிடமும் கதைப்பதுமில்லை. கேட்டால் சொல்வதுமில்லை.

எது எப்படியோ அவன் பல்கலைக்கழகம் தெரிவாகிவிட்டான் என்ற செய்தியை அவனது பல நண்பர்கள் நம்பவில்லை. “அடேய் அவன் சுட்டிலக்கத்த மாறிச்சொல்லுறான். வடிவா பாக்கச்சொல்லு” “என்னடா கடயடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்” என்று பேசிக்கொண்டனர்.

தாயின் ஆசையிலும் ஆசிரியர்களின் வழிகாட்டலிலும் நல்ல நம்பிக்கை கொண்டதால் றமேஸ் இன்று பல்கலைக்கழகத்தில்.உண்மையில் குடும்பச் சுமை அவனது கல்லிக்கு பாரமாகவன்றி படிக்கற்களாக இருந்திருக்கிறது என்பதிலும் பார்க்க அவன் அவ்வாறு மாற்றியிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

Friday, February 20, 2009

வெளிச்சத்தின் கனவால் சிதறிப்போன எண்ணங்கள்.


வழமைபோல் எனது அறையில் நான்மட்டுமே. ஏதோ பெரிய வேலைமுடித்துவிட்டு வீடுதிரும்பியவன் போல களைத்த முகத்துடன் சேட்டைக்கழற்றிவிட்டு கட்டிலில் சாய்ந்தேன். மிளிர்ந்துகொண்டிருந்த ரீயூப்லைற்றைச்சுற்றி,
விடியல் இதுதான் என்றெண்ணி தமது உல்லாசமான இறக்கைகளுடன் விட்டில் பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன. ஆதிசயக்கண்களுடன், அவர்களின் வாழ்வுபற்றிய கனவுடன் நான். காரணம் எனக்கொரு நண்பன் இருக்கின்றான். அவனுக்கு விட்டில்கள் என்றால் பிரியம். நண்பன் என்கிறேன் அவனுக்கு விட்டில்கள் என்றால் பிரியம் என்கிறேன் என்று குழம்பலாம், ஆனால் எனது நண்பன் யாருமல்ல ஐந்தறிவுள்ள நற்குணமுள்ள வீட்டுப்பல்லிதான். அவனுக்கும் எனக்குமுள்ள உறவு, நெருக்கம் பற்றி கேள்விகள் எழலாம், பெரிதாக ஏதுமில்லை. நான் நினைப்பதை சரிவராது என்று முற்கூட்டியே சொல்லிவிடும் திறமையால் அவ்வளவு உறவு.
இப்போதெல்லாம்நான்நினைப்பதொன்றுநடப்பதுவேறொன்று.இதுஎனக்கானதுமட்டுமல்லதமிழ்மக்களுக்கும்.நண்பனைபகலில்சந்தித்துக்கொள்வதுகுறைவு. இரவில்த்தான்வருவான்சாப்பாட்டிற்கோ, என்னுடன்கதைக்க வோதெரியவில்லை.நான்நினைப்பதுஇரண்டுநோக்கத்துக்காகவும்வருகின்றானென்று.
ஆதலால்அவனுக்காகமின்விளக்கைஅணைக்காமல்காத்திருப்பேன்.இவ்வளவிற்குள்எனதுநண்பன்ஊனமானவன்தனதுவாலைஎதன்காரணமாகவோஇழந்திருக்கிறான்.ஆனால்இதுவரைக்கும்அந்தநிலைபற்றிநான்கேட்கவுமில்லை,அவன்சொல்லவுமில்லை.இப்போதெல்லாம்முன்அனுபவம்இசம்பவம்என்றுஎதையும்யாருடனும்கேடுப்பழகிக்கொள்ளமுடியாது.அப்படிசற்று இறங்கிப்பழகினால்ஆபத்து. அதுவும்நெருக்கடிதான்.
அதனால்அவனதுஊனத்தைப்பற்றிநான்பொருட்படுத்தியதில்லை.தனதுஉயிர்வாழ்விற்காகவெனஎனதுஅறையைபயன்படுத்துகின்றானோ,அல்லதுநான்தனியேஇருக்கின்றேன்என்றுபார்க்கின்றானோதெரியவில்லை.வருவதும்போவதும்வழமையாகிவிட்டது.

இப்போதெல்லாம்ஆபத்துக்களைநாங்கள்தேடிச்செல்லத்தேவையில்லைஅதுவேபட்டங்களுடனும்பரிசுகளுடனும்எம்மைத்தேடிவரும்.நண்பன்அப்படிப்பட்டவனில்லை. பாவம்ஐந்தறிவுமட்டுமல்ல, இயலாதவனும்கூட. நம்பிக்கைபற்றிஎப்படிநியாயப்படுத்துவது. அதுதான்ஆபத்தானதே. விட்டில்கள்தம்வாழ்வைஅர்ப்பணிக்கஅங்குவருகின்றார்களோ,மாறாகசிறுபொழுதேனும்ஒளியில்வாழ்ந்துவிட்டுமற்றவர்வாழ்விற்குவழிசமைக்கிறார்களோதினமும்மாறிமாறிஇவைநடந்தேறுகின்றன.வருகிறார்கள்நண்பனின்பசியும்போகின்றது.த்தனையோஉயிர்கள்விளக்கொளியையும்காணமுடியாமல்பேரிரைச்சல்களையும்,வெடிப்பொலிகளையும் வாழ்வின் இராகமாக ஏற்று எண்ணாத் தேவைகளை பூர்த்திசெய்யமுடியாமல்வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இயலாத நண்பனையும், அவனது வீரத்தையும் பரீட்சிக்க பலவிட்டில்கள் தமது சாகசங்களைக் காட்டபாவம் வாலையிழந்தவன் தன்பரீட்சியத்தால்அவர்களை மடக்குவதும் என்கண்களில் படும். எதுவானாலும் விட்டில்கள் சிறிதுகாலம்தான் வாழ்பவை. விட்டிலுக்கு பறக்க இருக்கும் சுதந்திரம் பல்லிக்கில்லை. வாலை இழந்த நண்பன் கஸ்ரப்பட்டு இடத்திற்கிடம் மாறி இயன்றளவு முயற்சியால் தன்இலக்கைஅடைந்துவிடுவான். “கடினஉழைப்பும்தளராமனமும்உயிர்வாழ்வதற்குமட்டுமல்லஇஉயிரைக்கொடுக்கவும்தேவைஉண்மைதான்.இன்றுங்கூட எம்மக்களின் வாழ்வு இந்தநிலையில்த்தான். பல்லிவேட்டையில் தோற்றதில்லை…….பலர் பல்லியைப் பற்றிபலகதைபேசுவார்கள். பல்லிசொற்பலன், உச்சத்துப்பல்லி அச்சமில்லை,பக்கத்துப்பல்லிபயமில்லை. இதையும்விடதிருப்பி ஏசுவோரும்கூட, இவையெல்லாம் முன்னோர்களின் மூடநம்பிக்கை. இதை இப்பவும் ஆதரிப்போரும் உளர். இருந்தும் வெளியில் நான்நாலும்தெரிந்தவன், நவீனத்துவம் அடைந்தவன் என்பதையும் மறுப்பதில்லை. எங்காவது பல்லி சொல்லிக் கேட்டால் உடனே நிலத்தில் சுண்டுவதும், இப்போ என்னநினைத்தனான் அறுந்தபல்லி குறுக்க பாயுது என்று தடுமாறுவர். ஆவ்வளவிற்கு பல்லி என்னதான் சொன்னது மரபை ஆதரிப்போர் இதுபற்றி என்னசொல்கின்றனரோ? சிலமனிதர்கள் கதைப்பதே பல்லிபோன்றுதான் என்பர். பாவம்ந்தளவிற்கு என்னதான் சொல்கின்றது. பல்லியின் மொழியை யார்படித்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை அற்றவரின் தேடல் விளக்கம்தான் இவை என்று சொல்ல முடியும். அன்பு, அறிவு,அறம் அனைத்தும் தன்னிடம் இருக்கையில் அதைஅறியாது வெளியில் தேடுவது இன்று ஒரு போதும் ஏற்கமுடியாததே. நம்பிக்கையின் துணையுடன்தான் இருப்பு உறுதிப்படுத்தப்படுகையில் மூடக்கொள்கை அதைக்கூறுபோட விளைகின்றது.சாதாரணமாக நள்ளிரவில் அவன் எனக்குநன்றி சொல்லிவிட்டுப் போய்விடுவான். எனக்கு அப்போதும் கூடதூக்கம் வரவில்லை. மாடிக் கட்டிடங்களில் வசித்தாலும் புழுதிநிலத்தின் வாசனையும், பூத்துக் குலுங்கும் வயல்நிலங்களும் மனதுக்குள் வந்து வண்ணத்திரையில் கோலமாய் தெரிகின்றன. இப்போ புழுதிகிளம்பும்படியாகவும், புகைமூடும்படியாகவும் பாலைவனமாகி, அன்றைய கரிகால சோழனும் கலிங்கத்துப் பரணியுமாகிவருகிறது எமதுநிலம். எப்படிதூக்கம்வரும். ல்லாமே போலிஎன்று தெரிந்த பிறகும் வாழ்வை வெறுக்கமனம் தயாரில்லை. ஏனென்றால் நம்பிக்கையின் அத்திவாரம் அவ்வளவு உரமாக இருக்கின்றது.மனதுக்கு சஞ்சலமாக இருக்கும்போது தூக்கம் எப்படிவரும்.பேனாக்கள், பொத்தகங்கள் எல்லாம் வெறும் சடப்பொருட்களாகவே இன்று. எதிலும் உயிரைக்காண முடியாது. காரணம் அதைவிட மேலான கருவிகள்மலிந்துகிடக்கின்றன. கைகள் எதற்கு நகர்ந்தாலும் நில்என்று தடுக்கபலகைகள். பேரம்பேசவாவது ஒருவர் முனைந்தால் பெயரைகூட விட்டுவைக்க முடியாதாம். மனம் திறந்து மற்றவர்களிடம் பேசுவதென்பது இன்றுசுலபமானதல்ல. போகுமிடமெல்லாம் படுகொலைகள், சித்திரவதைகள் உரிமைமீறல்கள் என்று தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. தமிழினப் படுகொலைகள் நாடுகடந்து பேசப்பட்டாலும் வாயளவிலேயே நின்றுவிடுகின்றன. அந்நியநாட்டுப் படைகளை தமிழன் என்றுவருணித்த சிங்களதேசம், உண்மைத் தமிழனை எப்படிஅணுகும்? புறக்கணிப்புக்கள் இருக்கும்போது, புறகணிப்புக்கள் எப்படி மாறப்போகின்றன? பொறுமை இருப்பை இழக்கவைத்தது. தினமும் ஒருவிடியல் கனவுடன் எம் இருப்பு தொடர்கின்றது.