Thursday, February 21, 2013

உண்மையின் மரணம்



எல்லாம் முடிந்துவிட்டபின்
நாங்கள் அழுகின்றோம்
யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை

ஒட்டுமொத்தமாய்
இழந்துவிட்ட உணர்வுகள்
மனங்களில் இருள் மண்டிகிடக்கையில்
ஆர்பரிப்பது நாங்களே


எல்லோரும் பேசும்
பொருள்களாய்
எம் விடுதலை

இறுதியில் அறிக்கை
பொய்யான வதந்திகளாய்
பொறுப்பு கூறுதல்பற்றி

யார் கூறுவார் பெறுப்பு?
ஏதும் செய்யாத அரசா?
ஏதும் தெரியாத படைகளா?

போலிகள்!

எல்லாமே போலிகள்!

நாங்கள் அழுகிறோம்
உண்மையின் மரணத்தை எண்ணி...

பூமுகன்

No comments:

Post a Comment